குவைத்தின் பிரதமரும் மற்றும் பாராளுமன்ற அமைச்சரவையின் விவகாரத்துறை அமைச்சருமான ஷேக் சபா அல் காலித் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 21 நாட்கள் கடந்து இன்று எடுத்துக்கொண்டார். முன்னர் குவைத்தில் முதல் முறையாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்ட நேரத்தில்,நிகழ்ச்சியை துவங்கி வைத்த அவர் முன்மாதிரியாக முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்து. இதைத் தொடர்ந்து இன்று அவர் எடுக்கப்பட்ட டோஸ் இரண்டாவது மற்றும் ஒரு நபருக்கு செலுத்தபடும் கொரோனா தடுப்பூசிய கடைசி கடைசி டோஸ் ஆகும்.
இதுபோல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான அனஸ் அல் சலே மற்றும் சுகாதார அமைச்சர் ஷேக் டாக்டர். பசில் அல்-சபா, அரசு செய்தித்துறை மையத்தின் தலைவரும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான தாரிக் அல்-முஸ்ரிம், குவைத் சுகாதரத்துறை செய்தி தொடர்பாளர் அப்துல்லா அல்-சனத் உள்ளிட்ட பலரும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது Batch மருந்து குவைத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி வழங்க சுகாதரத்துறை அதிகாரிகள் சார்பில் மற்றொரு மையம் திறக்கப்பட்டுள்ளது. Fair Groundயில் அமைந்துள்ள இந்த புதிய No.6 மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
இரண்டாவது டோஸ் மருந்து எடுக்கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் ஷேக் டாக்டர்.பசில் அல்-சபா கூறுகையில் குவைத்தில் இதுவரையில் 20,000 பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்காட்டாக தெளிவுபடுத்தினார். இதுபோல் 250,000 பேர் இதுவரையில் கொரோனா தடுப்பூசிய பெறுவதற்காக இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர் என்றார். மேலும் கொரோனா தடுப்பூசிய எடுத்த பிறகு அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்த வழக்குகள் எதுவும் குவைத்தில் இதுவரையில் பதிவாகவில்லை என்பதும் குறி்ப்பிடத்தக்கது.