குவைத்தில் வெளிநாட்டினர் 30% சதவீதமாக குறைந்தால் நாடு மேலும் வளர்ச்சி பாதையில் செல்லும் பிரதமர் அறிவிப்பு;நேற்று மாலையில் நாட்டில் உள்ள செய்தித்தாள்களின் நிருபர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் இதை தெரிவித்தார்
Image:Kuwait PM
குவைத்தில் வெளிநாட்டினர் 30% சதவீதமாக குறைந்தால் நாடு மேலும் வளர்ச்சி பாதையில் செல்லும் பிரதமர் அறிவிப்பு
குவைத்தில் தொழிற்துறையில் உள்ள தொழிலாளர் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வரும் ஆண்டுகளில் தகுந்த மாற்றங்கள் தேவை என்று பிரதமர் ஷேக் சபா காலித் அல் ஹமாத் அல் சபா தெரிவித்துள்ளார். நேற்று மாலையில் நாட்டில் உள்ள செய்தித்தாள்களின் நிருபர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் கூறுகையில் கடந்த காலகட்டத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது தேசிய சட்டமன்றத்தால் மக்கள் தொகை தொடர்பான ஒரு சட்டம் இயற்றப்பட்டதாகவும் அது அங்கீகரிக்கப்பட்ட நிலையில், தொழிற்துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் தேவையான பல திருத்தங்களை செய்து வருகிறது என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் நாட்டில் உள்ள மக்கள்த்தொகையின் அடிப்படையில் 70% குடிமக்களும், 30% வெளிநாட்டினரும் வாழ்வதே சரியான விகிதம் எனவும் தற்போதைய ஏற்றத்தாழ்வுகளிலிருந்து நாம் இன்னும் சிறந்த நிலைக்கு செல்ல வேண்டும்,அப்போது தான் நாம் மேலும் முன்னேற முடியும் என்று அவர் கூறினார். இதற்கிடைய அரசுத்துறை சார்ந்த பல வேலைகளில் இருந்து வெளிநாடினர் கடந்த காலங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர், இதன் மூலம் இந்தியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் வேலை இழந்துள்ளனர்.