BREAKING NEWS
latest

Wednesday, January 27, 2021

குவைத் வருகின்ற பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது

குவைத்தில் வருகின்ற பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது;சற்றுமுன் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

Image credit:Licensing Department

குவைத்தில் வருகின்ற பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது

குவைத்திற்கு விமானத்தில் வருகின்ற பயணிகள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் கொண்டு வருவதால் ஒவ்வொரு விமானத்திலும் வருகின்ற குறிப்பிட்ட சில பயணிகளுக்கு மட்டுமே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரைவில் விமான நிலையத்தில் வைத்து சுகாதாரத்துறை சார்பில் தோராயமாக மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் யு.கே. யில் இருந்து வந்த இரண்டு பெண் பணிகளுக்கு புதிய மரபணு மாற்றம் ஏற்பட்ட தீவிரமான வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில். விமான நிலையம் வருகின்ற அனைவரும் பி.சி.ஆர் சான்றிதழ் கொண்டு வந்ததாலும், மீண்டும் குவைத் விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை நடத்த முடிவு செய்யபட்டு நடைமுறை படுத்தப்பட்டது. ஆனால் வருகின்ற அனைத்து பயணிகளையும் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்ய சுகாதாரதுறை தரப்பில் போதுமான வசதிகள் இல்லாத நிலையில்,தனியார் துறை மருத்துவமனைகளும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்த அனுமதி வழங்க சுகாதார மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறைகள் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி தனியார் துறை சுகாதார மருத்துவமனைகளில் ஒரு பி.சி.ஆர் பரிசோதனை நடத்த கட்டணமாக 30 தினார்கள் என்று ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சகத்தின் உரிமத்துறை(Licensing Department) இயக்குநர் அவர்கள் வெளியிட்டார். தனியார் மருத்துவமனைகள், பல்மருத்துவ கிளினிக்குகள், தனியார் கிளினிக்குகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களின் இயக்குநர்களுக்கும் இது சம்மந்தப்பட்ட நோட்டீஸ் இன்று அனுப்பப்பட்டது. குவைத் சுகாதரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகள் அனைத்தும் கடைபிடித்து மட்டுமே பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to குவைத் வருகின்ற பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது

« PREV
NEXT »