BREAKING NEWS
latest

Monday, January 25, 2021

குவைத் அமைச்சரவை கூட்டத்தின் இன்றைய முடிவு வெளியாகியுள்ளது;விமான பயணிகளின் எண்ணிக்கை 35 என்ற முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது

குவைத் அமைச்சரவை கூட்டத்தின் இன்றைய முடிவு வெளியாகியுள்ளது;விமான பயணிகளின் எண்ணிக்கை 35 என்ற முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது;குடிமக்கள் மற்றும் முதியவர்களுக்கு விலக்கு அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குவைத் அமைச்சரவை கூட்டத்தின் இன்றைய முடிவு வெளியாகியுள்ளது;விமான பயணிகளின் எண்ணிக்கை 35 என்ற முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது

குவைத்திற்கு வருகின்ற விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 35 ஆகவும், ஒரு நாளுக்கு மொத்த பயணிகளின் எண்ணிக்கையை ஆயிரமாகவும் குறைக்க, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் எடுத்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னர், நேற்று ஜனவரி 24 முதல் வருகின்ற பிப்ரவரி 6 வரை பயணிகளின் எண்ணிக்கையை புதிய மரபணு மாற்ற கொரோனா பரவல் காரணமாக குறைப்பது என்ற குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் எடுத்த முடிவுக்கு இன்று(25/01/21) அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக தற்போதுள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி 6 வரை தொடரும். இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவில் இருந்து குடிமக்கள் மற்றும் முதியவர்களுக்கு விலக்கு அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் வர்த்தக விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான இரண்டாம் கட்ட திடடத்தையும் தற்காலிகமாக ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்தது. சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே விமான நிலையம் தொடர்பான புதிய முடிவுகளை இனிமுதல் அறிவிக்க வேண்டும் என்று அமைச்சரவை சிவில் விமானத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். நாட்டில் கோவிட்-20 மரபணு மாற்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குவைத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த வாரம் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக துபாய் போன்ற நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்ட இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

Add your comments to குவைத் அமைச்சரவை கூட்டத்தின் இன்றைய முடிவு வெளியாகியுள்ளது;விமான பயணிகளின் எண்ணிக்கை 35 என்ற முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது

« PREV
NEXT »