வெளிநாட்டிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குவைத்துக்கு வரும் பயணிகள் இனிமுதல் 72 மணிநேரத்திற்குள் செல்லுபடியாகும் பி.சி.ஆர் சான்றிதழை வழங்க வேண்டும். இந்த புதிய முடிவை புதிய மரபணு மாற்ற கொரோனா பரவல் காரணமாக, குவைத் கொரோனா தொடர்பான மறுஆய்வுக் குழு அறிவித்துள்ளது.
இதன்படி, இனிமுதல் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் வழங்கப்படும் பி.சி.ஆர் சான்றிதழை 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டு செல்லுபடியாகும் வித்தில் இருக்க வேண்டும், முன்னதாக இது 96 மணி நேரம் செல்லுபடியாகும் விதத்தில் பயன்படுத்த பணிகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
புதிய முடிவு துபாய் போன்ற நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்டு குவைத்தில் நுழையவிருக்கும் இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். இந்த புதிய முடிவு ஞாயிற்றுக்கிழமை(17/01/2021) அன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.