குவைத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 352 பேர் உயிர் இழந்தனர் எனவும்,போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2019 உடன் ஒப்பிடும்போது இறப்புகளில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை, மீறல்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கியுள்ளதும் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் கடந்த சில ஆண்டுகளில் குறைந்த போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் இறப்புக்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. மேலும், 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர், சாலைகள் சில மாதங்கள் காலியாக இருந்தன, மேலும் போக்குவரத்து குறைவாக இருந்ததும் ஒரு காரணமான கருதப்படுகிறது. இதுபோல் கடந்த வருடம் போக்குவரத்து குற்றங்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 50 தினார்களிலிருந்து 100 தினார்களாக உயர்த்தப்பட்டது.
மேலும் விபத்துகளை ஏற்படுத்தும் வாகனத்தை காவலில் எடுத்து, வாகனத்தை இரண்டு மாதங்களும், ஓட்டுநரை 48 மணி நேரமும் காவலில் வைக்க முடிவு செய்யப்பட்டது மற்றொரு காரணம் என்று நம்பப்படுகிறது.