குவைத்திற்கு தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாக இந்திய,தமிழகம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண்மணி(வயது-40) ஒருவர் வீட்டு வேலைக்கு வந்தார்,அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறி்ப்பிடத்தக்கது. குவைத் வந்து சில மாதங்கள் மட்டும் முதலாளி வீட்டில் வேலை செய்தார், பிறகு முதலாளி வீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் இந்திய தூதரகம் சென்றார்.(நல்லெண்ண அடிப்படையில் பெண்மணியின் தனிப்பட்ட கூடுதல் தகவல்கள் இங்கு பதிவு செய்யவில்லை)
தூதரகம் சென்ற பின்பு தான் தெரிந்தது இவர் மீது திருட்டு வழக்கு இருக்கிறது என்றும், இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பலரிடமும் உதவி கேட்டுள்ளார். கடைசியாக குவைத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் தமிழன் ரகு அவர்கள் கவனத்திற்கு இந்த பிரச்சினை வந்துள்ளது.அவர் என்னை(ஆல்வினை) தொடர்பு கொண்டு நம் தமிழ் உறவு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் அவர்களை ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினார்.
இதை தொடர்ந்து ஒரு மாதகால சட்ட போராட்டத்திற்க்கு பிறகு,அவருடைய வழக்குகள் தொடர்பான பிரச்சினை முடிந்தது இன்று(16/01/21) சனிக்கிழமை காலை அவர் தாயகம் சென்று அவருடை குடும்பத்தோடு இணைந்து விட்டார். இந்த போதிலும் அவருடைய முத்த மகனின் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்க வில்லை என்பது வேதனைக்குரியது. குவைத் மனித உரிமை ஆணைய பிரதிநிதியாக ஆல்வின் ஜோஸ் அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.