Best City Organisation நடத்திய ஆய்வில் உலகின் மிகவும் பின்தங்கிய 15 நகரங்களில் குவைத் நகரம் ஒன்றாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத்சிட்டி உலகளவில் 86 வது இடத்திலும், வளைகுடா நாடுகள் பட்டியலில் 6 வது இடத்திலும் உள்ளது. துபாய் உலகின் ஆறாவது சிறந்த நகரமாகவும், அபுதாபி 15-வது நகரமாகவும் உள்ளது.
மேலும் வளைகுடா நகரங்களின் பட்டியலை பொறுத்தவரை துபாய் முதலிடத்திலும், அபுதாபி இரண்டாவது மற்றும் தோஹா மூன்றாமிடத்திலும் உள்ளன. ரியாத் வளைகுடாவின் நான்காவது பெரிய நகரமாகும், அதைத் தொடர்ந்து மஸ்கட் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.பல அடிப்படையாக அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. காலநிலை, பாதுகாப்பு, சுற்றுலா தலங்கள், பொது பூங்காக்கள் மற்றும் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை இதில் அடங்கும்.
குவைத் கோடையில் வெப்பமான நகரங்களில் ஒன்றாகும், மேலும் நீர் கோபுரங்கள் அதன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும் என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. லண்டன், நியூயார்க், பாரிஸ், மாஸ்கோ, டோக்கியோ, துபாய், சிங்கப்பூர், பார்சிலோனா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாட்ரிட் ஆகியவை உலகின் முதல் 10 சிறந்த நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.