பொதுவாக ஒரு அமைப்பு துவங்கப்பட்டால் அதை துவங்கும் மக்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களோ,அவர்கள் பொதுவாக அந்த குறிப்பிட்ட மாநிலத்தைச சேர்ந்தவர்களுக்கு தேடிச்சென்று உதவி செய்யும் நிலையில் மலையாளம்,தமிழ் என்று பாகுபாடு இல்லாமல் புதிதாக துவங்கப்பட்ட விஸ்மயா இன்டர்நேஷ்னல் அமைப்பினர், தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் தனியாக, தமிழ் பிரிவினை துவங்கி சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதன் துவக்கமாக குவைத்தில் பணியிடத்தில் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இரண்டு கால்கள் மற்றும் முதுகுப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில் இருகுகும் தமிழக பெண்மணி உதவி கோரினார். இதையடுத்து அமைப்பு பிரநிதிகள் முதல்கட்டமாக அவர்களுக்கு தேவையான 1 மாதத்திற்கான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து நேரில் சென்று ஆறுதல் கூறி பொருட்களை வழங்கினர். இதற்கு முன்னர் குவைத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவர் சாலையில் திரியும் வீடியோ வைரமாக பரவியது. அந்த நபரை மருத்துவமனையில் அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கையிலும், தமிழ் அமைப்பு பிரதிநிதிகளுடன் இணைந்து விஸ்மயா அமைப்பினர் உதவி செய்தனர்.
புதிதாக துவங்கப்பட்ட நிலையில் விஸ்மயா அமைப்பினர்,குவைத்தில் அவசரகால அடிப்படை உதவிகள் தேவைப்படும் சாதாரண தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கும் பணிகளை துவங்கியுள்ளனர். வரும் நாட்களில் பல்வேறு கூடுதல் சேவைகளை வழங்குவதற்காக நடவடிக்கைகளை அமைப்பினர் ஒருங்கிணைந்து வருகின்றனர்.