(Kuwaitcity, Weather Report)
குவைத்தில் வருகின்ற புதன்கிழமை முதல் கடுமையான குளிர் தொடங்கும் என்ற தகவலை குவைத் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குவைத் வானிலை ஆய்வு மையத்தின், வானிலை ஆய்வாளர் முஹம்மது கரம் அவர்கள் இன்று(17/01/21) ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புதன்கிழமை மாலை முதல் நாட்டில் திறந்தவெளி பகுதிகள் மற்றும் பாலைவன பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரியாகவும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் மேற்கு ரஷ்யாவிலிருந்து வீசும் சைபீரிய காற்றின் வடமேற்கு காற்றோடு சேர்ந்து வருவதால் புதன்கிழமை மாலை முதல் சனிக்கிழமை வரையில் இந்த கடுமையான குளிர் தொடரும் என்று அவர் தெரிவித்தார். மாலை நேரங்களில் வெப்பநிலை மிகவும் குறைவது இருக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Kuwait Weather | Zero Degrees | Weather Report