குவைத்தின் புதிய முடிவு; நாட்டிற்கு வரவிருந்த 60,000 பயணிகள் விமான பயணச்சீட்டுகளை கடந்த இரண்டு நாட்களில் ரத்து செய்தனர்;விமான டிக்கெட்டுகளின் விலை ஆயிரம் தினார்களும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது
குவைத்தின் புதிய முடிவு; நாட்டிற்கு வரவிருந்த 60,000 பயணிகள் விமான பயணச்சீட்டுகளை கடந்த இரண்டு நாட்களில் ரத்து செய்தனர்
குவைத் விமான அதிகாரிகள் மரபணு மாற்ற ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நாட்டில் கண்டறியப்பட்ட நிலையில் வரும் ஒவ்வொரு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை 35 ஆகவும், தினசரி பயணிகளின் எண்ணிக்கையை 1,000 ஆகவும் குறைக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் 60,000 ற்கும் மேற்பட்ட விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, அண்டை வளைகுடா நாடுகளில் இருந்துகூட குவைத்தில் நுழைய விமான டிக்கெட்டுகளின் விலை ஆயிரம் தினார்களும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டில் கோவிட்-20 மரபணு மாற்ற வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, குவைத் விமான அதிகாரிகள் நாட்டிற்கு வரும் ஒவ்வொரு விமானத்திலும் பயணிகளின் எண்ணிக்கையையும் விமான நிலையத்திற்கு வரும் மொத்த பயணிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவு பிறப்பித்தனர். இந்த புதிய முடிவு ஜனவரி 24(இன்று) முதல் பிப்ரவரி 6 வரை நடைமுறைக்கு வரும்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் முடிவின் மூலம், பல விமான நிறுவனங்கள் வர்த்தக ரீதியான இழப்புகளை மதிப்பிட்டு,குவைத்துக்காக முன்கூட்டி திட்டமிடப்பட்ட பயணங்களை ரத்து செய்துள்ளன. நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் முடிவைத் தொடர்ந்து, ஒரு விமானத்தில் அதிகபட்சமாக பயணிகளின் எண்ணிக்கை 35-ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான நவீன கருவிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதையடுத்து அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கூடுதலாக பி.சி.ஆர் பரிசோதனை கட்டணத்தை விமான நிறுவனம் செலுத்த வேண்டும்.இந்த தொகையை விமான நிறுவனங்கள் பயணிகளிடமிருந்து வசூலிக்கும்.
இந்த புதிய செயல்முறைகளுக்கு சிறந்த ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்த முடிந்ததும், புதிய கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், துபாய் மற்றும் பிற நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்டு குவைத் வரும் பயணிகள் புதிய முடிவால் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இரண்டு வார காலம் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முடித்துவிட்டு குவைத்துக்கு பயணிக்க காத்திருந்த பல பயணிகள் கடைசி நிமிடத்தில் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்து நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அவர்களில் நூற்றுக்கணக்கான இந்தியர்களும் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.