குவைத்தில் வெளிநாட்டினருக்கு சிவில் ஐடி அடையாள அட்டைகளுக்கு பதிலாக ரெசிடென்சி கார்டுகள் வழங்க திட்டம்;சிவில் ஐடி அட்டைகளை உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமாக மட்டுப்படுத்துவதும் திட்டம்
குவைத்தில் வெளிநாட்டினருக்கு சிவில் ஐடி அடையாள அட்டைகளுக்கு பதிலாக ரெசிடென்சி கார்டுகள் வழங்க திட்டம்
குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையாக தற்போது நடைமுறையில் சிவில் ஐடி கார்டுகளுக்கு பதிலாக புதிதாக ரெசிடென்சி கார்டுகள் வழங்கவும் மற்றும் சிவில் அடையாள அட்டைகளை ரத்து செய்யவும், சிவில் அடையாள அட்டைகளை குவைத் நாட்டினருக்கு மட்டுமாக மட்டுப்படுத்தவும் உள்துறை அமைச்சகம் ஒரு விரிவான திட்டத்தை தயாரித்து அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்று செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் குவைத் உள்துறை அமைச்சகம் இதுபோன்ற ஒரு முக்கியமான திட்டத்தை நீண்ட பல்வேறுபட்ட ஆய்வுக்குப் பிறகு இறுதியாக தயார் செய்துள்ளது. சிவில் ஐடி அட்டைகளை உள்ளூர்வாசிகளுக்கு(குவைத்திகளுக்கு) மட்டுமாக மட்டுப்படுத்துவதும், வெளிநாட்டவர்களுக்கு Magnetic chip உடன் கூடிய ரெசிடென்சி கார்டுகள் வழங்கும் புதிய திட்டம் இதன் மூலம் நடைமுறையில் வருகின்றன. தனிநபரின் முழு விவரங்களைக் கொண்ட இந்த புதிய வகையான ரெசிடென்சி கார்டைப் பயன்படுத்தி அரசாங்கத்துடன் தொடர்புடைய அனைத்து பரிவர்த்தனைகளும் மற்றும் தற்போது சிவில் ஐடி மூலம் பயன்படுத்தப்படும் பிற சேவைகளையும் இந்த புதிய ரெசிடென்சி கார்டுகள் மூலம் பூர்த்தி செய்ய முடியும்.
உலகின் பெரும்பாலான நாடுகள் அடையாளத்திற்கான சான்றாக ரெசிடென்சி கார்டுகளே வெளிநாட்டவர்களுக்கு வழங்குகின்றது,அதை தொடர்ந்து இந்த திட்டத்தை குவைத் நாட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது சிவில் ஐடி அலுவலகங்களில் ஏற்படும் பொதுமக்களின் நெரிசலைக் குறைக்கும் என்று உள்துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
Kuwait Moi | Kuwait CivilID | Residence Card