குவைத்தில் சட்டமன்ற குழு திங்களன்று சபைக் கூட்டத்தில் விவாதிக்கவுள்ள முக்கிய பிரச்சினை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பணம் அனுப்புவதற்கு 1% வரி விதிக்கும் முடிவு
Image credit:The National
குவைத்தில் சட்டமன்ற குழு விவாதிக்கவுள்ள முக்கிய பிரச்சினை பணம் அனுப்புவதற்கு 1% வரி விதிக்கும் முடிவு
குவைத்தில் சட்டமன்ற குழுவால் விவாதிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மையான பிரச்சினை என்பது நாட்டில் வேலை செய்யும் நபர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு வரிவிதிக்கும் முடிவு என்று குவைத் தினசரி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி திங்களன்று சபைக் கூட்டத்தில் விவாதிக்கத் தேர்ந்தெடுத்த முக்கிய பிரச்சினைகளில் முதன்மையானது, பணம் அனுப்புவதற்கு 1% வரி விதிக்கும் முடிவு குறித்து எனவும், நாட்டிலிருந்து பணத்தை அனுப்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும்,வருங்கால சந்ததியினருக்கு ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான சட்டம், உள்துறை அமைச்சக ஊழியர்களுக்காக ஒரு தனியார் மருத்துவமனையை நிறுவுதல் மற்றும் ஈராக் மீதான மிருகத்தனமான படையெடுப்பில் ஈடுபட்ட குவைத்திகள் அல்லாத இராணுவ வீரர்களுக்கான எதிர்கால பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்தும் இந்த குழு பரிசீலிக்கும்.
கூடுதலாக, சொந்தமான நிறுவனங்கள் உள்ளவர்களுக்கு அவர்களின் புதிய திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான சட்டத்தையும், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான சுகாதார காப்பீட்டில் கடுமையான அல்லது மிதமான உடல் குறைபாடுகள் உள்ளவர்களையும் சேர்க்கும் திட்டத்தையும் குழு மதிப்பாய்வு செய்யும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.