சவுதியில் தவறான சிகிச்சை பச்சிளம் குழந்தை மரணம்;1.5 லட்சம் ரியால்கள் பெண் மருத்துவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது;அரிடாவில் உள்ள தனியார் மருத்துவ மையத்தில் வைத்து குழந்தை உயிரிழந்தது
சவுதியில் தவறான சிகிச்சை பச்சிளம் குழந்தை மரணம்;1.5 லட்சம் ரியால்கள் பெண் மருத்துவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
சவுதியில் மருத்துவப்பிழை காரணமாக புதிதாகப் பிறந்த குழந்தை உயிரிழந்த வழக்கில் குற்றவாளி என்று கண்டறியப்பட்ட பெண் மருத்துவருக்கு ஒருவருக்கு 1.5 லட்சம் ரியால்களை ரத்தப் பணமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சவுதியின் அரிடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மையத்தில் வைத்து உயிரிழந்தது. இந்த தீர்ப்பை ஜிசான் ஷரியா மருத்துவ ஆணையம் வழங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விசாரணையில் மருத்துவப்பிழை காரணமாக குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், தொடர்ந்து குழந்தை சுயநினைவை இழந்ததாகவும், குழந்தையின் உடல்நலம் குறித்த உண்மையான விவரங்களை சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனத்தால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தையை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் பழுதாகி இருந்தால், சிறப்பு சிகிச்சைக்காக குழந்தையை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடியாமல் போனதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பெற்றோரின் புகாரைப் பெற்ற பின்னர், சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவரிடம் விசாரணை நடத்தினர், மேலும் குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ பதிவுகளை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து விரிவான விசாரணைக்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ துறை சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் ஷரியா மருத்துவ ஆணையத்தின் முதல் அமர்வு கடந்த அக்டோபரில் இது தொடர்பான வழக்கினை ஆராய்ந்து பின்னர், இந்த தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Saudi Health | Saudi Doctor | Baby Death