(அமெரிக்காவின் புதிய அதிபர் பைடன்)
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் கடந்தமுறை பதிவேற்ற பிறகு குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார், மேலும் பல இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவில் நுழைய விசா உள்ளிட்டவை வழங்கவும் தடைவிதித்து இருந்தார். இந்நிலையில் புதிய அதிபராக பைடன் பதிவேற்ற பிறகு இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாழுகின்ற இந்த பூமியின் பாதுகாப்பு தொடர்பான காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் சேர அமெரிக்கா முடிவு செய்துள்ளது எனவும், அதேபோல இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலிருந்து மக்கள் வர பிறப்பித்திருந்த தடைகளை நீக்க ஜோ-பைடன் முடிவு செய்துள்ளார்.அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் கையெழுத்திட உள்ள முக்கிய திட்டங்களில் இவை இரண்டும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் கடந்தமுறை வெள்ளை மாளிகையில் அதிபராக அரியணை ஏறியதும் பதவி விலகயுள்ள அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த சர்ச்சைக்குரிய கொள்கை முடிவுகளை அனைத்தையும் பின்வாங்கவும் பைடன் முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி, இனவெறி சர்ச்சை, பொருளாதார நெருக்கடி, மாறிவரும் காலநிலை நெருக்கடி ஆகிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த பைடன் முடிவு செய்துள்ளதாகவும் அங்கிருந்த வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 2017-இல் இஸ்லாம் மக்கள் அதிகம் வாழும் ஏழு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவில் நுழைய ட்ரம்ப் பிறப்பித்திருந்த தற்காலிக பயணத் தடையையும் நீக்க பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.