குவைத்தில் மரபணு மாற்ற கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் உடனடியாக ஊரங்கு உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் இல்லை அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன என்று உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
குவைத்தில் மரபணு மாற்ற கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் உடனடியாக ஊரங்கு உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் இல்லை
குவைத்தில் மரபணு மாற்ற கோவிட்-20 கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,உடனடியாக ஊரங்கு விதிக்கப்படுவது அல்லது மூன்றாம் கட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான திரும்பிச் செல்ல எந்த சூழ்நிலையும் இல்லை என்று சுகாதார அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன என்று உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் சுகாதார நிலைமை தற்போது பாதுகாப்பானது மற்றும் திருப்திகரமாக உள்ளது எனவும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும்,பயணிகள் தொடர்பாக விமான நிலையத்தில் தற்போதைய நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாட்டில் மரபணு மாற்றப்பட்ட கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டால் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வருகின்ற திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என்று செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.