ஓமானில் நாளை முதல் பொதுமக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது;இன்று நடைபெற்ற அரசு பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
Image credit:Oman News Agency
ஓமானில் நாளை முதல் பொதுமக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது
ஓமானில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளுக்கு மத்தியில் பொதுமக்கள் கூடும் சமூக நிகழ்வுகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநாடுகள், கண்காட்சிகள், உள்ளூர் நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், சர்வதேச மாநாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளும் நடத்த தடை விதித்து இன்று நடைபெற்ற அரசு பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
இதன்படி நாளை(28/01/21) வியாழக்கிழமை இது நடைமுறையில் வருகின்றன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் மீண்டும் திறக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடிமக்களும் மற்றும் நிரந்தரமாக தங்கியுள்ள வெளிநாட்டினரும் தேவையில்லாமல் நாட்டிற்கு வெளியே பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் உச்சக்குழு பரிந்துரை செய்துள்ளது. மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிகிறது.