அமீரகத்தில் இந்திய தம்பதிகளின் குழந்தை தொண்டையில் தாய்ப்பால் சிக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது;போலீசார் கூடுதல் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்
Image credit: Sharjah Police
அமீரகத்தில் இந்திய தம்பதிகளின் குழந்தை தொண்டையில் தாய்ப்பால் சிக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் தாய்பால் தொண்டையில் சிக்கியதால் ஒரு மாதங்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தை இறந்தது. அல் நஹ்தா பகுதியில் வசிக்கும் இந்திய தம்பதியினரின் குழந்தை, தாய்ப்பால் மூச்சுக்குழாயில் சிக்கியதால் இந்த துயரமான சம்பவம் நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஷார்ஜா போலீசார் கூடுதல் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தாய்பால் வழங்கப்பட்ட பின்னர் குழந்தையை படுக்கையில் தூங்க வைத்தார்.ஆனால் பால் குடித்தபின் குழந்தை ஏப்பம் எடுக்கவில்லை என்றும், படுக்கவைத்து சிறுதுநேரத்தில் குழந்தையின் வாயிலிருந்து பால் வெளியே வருவதும் கண்டதாகவும் தாயார் போலீசாரிடம் கூறினார். தாய்ப்பால் தொண்டையில் சிக்கியதால் இந்த மரணம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரகால உதவிக்குழு துணை மருத்துவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றனர். இது தொடர்பாக மேலாதிக்க பரிசோதனைக்காக உடல் தடயவியல் ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
Sharjah Police | Indian Couple | Baby Death