குவைத்தில் உள்ள முக்கியமான இடங்களையும் மற்றும் நீங்கள் செல்ல வேண்டிய முக்கிய அரசு சார்ந்த அலுவலகங்கள் இப்படி குவைத்தில் உள்ள எதுவாக இருந்தாலும் யாருடைய உதவியின்றி கண்டறிந்து செல்ல உதவும் வகையில், கூகிள் வரைபடத்தைப் போலவே, 2013இல் குவைத் பி.சி.ஐ வெளியிட்ட Application-தான் Kuwait Finder ஆகும்.
இப்போது சிவில் தகவலுக்கான பொது அதிகாரசபை சார்பில் Kuwait Finder பயன்பாட்டின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் பல அம்சங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளது. ஸ்மார்ட் சாதனங்கள்(தொலைபேசி உள்ள எதிலும்) மற்றும் கணினிகளிலும் பயன்படுத்தும் விதத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Kuwait Finder Application-ஐ புதுப்பிக்க வேண்டும் என்று பல பயனர்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் முசிட் அல்-சுயசி தெரிவித்தார். உலக அளவிலான நவீன நிரலாக்க மொழியுடன் உருவாக்கபட்ட இந்த புதுப்பிக்கப்பட்ட செயலியை மிக எளிதாகப் பயன்படுத்தலாம். புதுப்பிக்கப்பட்ட Kuwait Finder Application-யில் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளின் இணைப்புகளை இணைக்க அனுமதிக்கும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.