புனித ரமலான் மாதம் 100 நாட்களில் தொடங்கும் என்று புகழ்பெற்ற அரபு வானியலாளர் ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் அரபு ஒன்றிய உறுப்பினர் இப்ராஹிம் அல் ஜர்வான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வருடத்தின் ரமலான் பிறை 2021 ஏப்ரல்,12-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட் நேரப்படி மாலை 06:31 மணிக்கு உருவாகும் என்று தெரிவித்தார்.
எனவே, ஏப்ரல் 13,2021 செவ்வாய்க்கிழமை ரமலான் தினம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.