குவைத்தில் ரத்து செயல்பட்ட விமான பயணச்சீட்டு கட்டணத்தை முழுமையாக பெற பயணிக்கு உரிமை உண்டு தினசரி செய்தி வெளியிட்டுள்ளது;எந்தவொரு தொகையும் கழிக்காமல் பணத்தைத் திரும்பப் பெற பயணிககு உரிமை உண்டு என்று கூறுகிறது
குவைத்தில் ரத்து செயல்பட்ட விமான பயணச்சீட்டு கட்டணத்தை முழுமையாக பெற பயணிக்கு உரிமை உண்டு தினசரி செய்தி
குவைத்தில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சிகள் மற்றும் சுற்றுலா ஏஜென்சிகளுக்கு, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது எனவும், அதில் பயண டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள் ஆகியவை ரத்து செய்யப்பட்ட பிற சுற்றுலா சேவைகளின் மதிப்பைத் திருப்பித் தருமாறு கோருவதற்கு பயணிக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளது. இடஒதுக்கீட்டின் நிபந்தனைகளைப் பொருட்படுத்தாமல் கடந்த டிசம்பர் 21, 2020 முதல் ஜனவரி 1, 2021 வரை இது பொருந்தும் என்று அல் குபாஸ் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அறிக்கையின்படி, டி.ஜி.சி.ஏ சுற்றறிக்கையில் பயணிகள் டிக்கெட்டை திருப்பித் தரக்கூடியதாகவோ( Refundable)அல்லது திருப்பிச் செலுத்த முடியாததாகவோ(Non-refundable) முன்பதிவு செய்திருந்தாலும், எந்தவொரு தொகையும் கழிக்காமல் பணத்தைத் திரும்பப் பெற அவருக்கு உரிமை உண்டு என்று கூறுகிறது. பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, தொகையை பணமாகவோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ திரும்பப்பெறக் கோருவதற்கும் அல்லது இந்த சுற்றறிக்கையின் தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு நிலுவைத் தொகையை வைத்திருப்பதற்கும் பயணிக்கு உரிமை உண்டு.
மேலே குறிப்பிடப்பட்ட காலத்திற்கு ஒவ்வொரு சேவைக்கும் சேவை கட்டணமாக 10 தினார்களை டிராவல் ஏஜென்சிகள் மற்றும் சுற்றுலா ஏஜென்சி அலுவலகங்கள் கழிக்க முடியும் என்றும் அது குறிப்பிட்டது. கொரோனா வைரஸின் புதிய மரபணு மாற்ற வைரஸ் பரவல் இங்கிலாந்தில் பரவியதால், டிசம்பர் 21, 2020 முதல் ஜனவரி 1, 2021 வரை, அனைத்து வணிக நடவடிக்கைகளுக்கும் குவைத் சர்வதேச விமான நிலையம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அறிக்கையில் பயணிகள் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து தொடர்பான கூடுதல் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.