சவுதி அரேபியாவில் மொபைல் போன் சிம் கார்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 7 இந்தியர்களையும், ஒரு பங்களாதேஷ் நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர், அவர்களை இரகசிய பிரிவு அதிகாரிகள் ரியாத் வைத்து கைது செய்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களிடம் இருந்து 3,224 சிம் கார்டுகள், ஆறு கைரேகை பதிவு இயந்திரங்கள், 16 மொபைல் போன்கள், ப்ரீபெய்ட் மொபைல் போன் இணைப்புகளை ரீசார்ஜ் செய்வதற்கான எட்டு சாதனங்கள், பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பெயரில் ரீசார்ஜ் மூலம் பெறப்பட்ட 4,060 ரியால்கள் பணம் மற்றும் மடிக்கணினிகளை போலீசார் கண்டுபிடித்தனர். இவர்களை கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.