சவுதியில் மீண்டும் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய்த்தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா...??? என்பது தொடர்பாக கடுமையான பரிசோதனைகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகளின் போது கோவிட் பாதுகாப்பு விதிமுறைகள் மீறிய மற்றும் முகமூடி அணியாத 20,000 ற்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒரே வாரத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தனிநபருக்கு 1000 ரியாலும்,நிறுவனங்களுக்கு 10,000 ரியால்களும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரியாத்தில் மட்டும் 7000 ற்கும் மேற்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக முகமூடி அணியாமல் பொதுவெளியில் வந்த குற்றத்திற்காக, நபர்களுக்கு இடையேயான இடைவெளி கடைப்பிடிக்காத குற்றத்திற்காக மற்றும் சவுதி அறிவித்துள்ள கோவிட் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாத குற்றத்திற்காக நிறுவனங்களுக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்காவில் 3000 நபர்களுக்கும்,அல்-கசிம் பகுதிகளில் 2000 திறக்கும் மேற்பட்ட நபர்களும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அதிகாரிகள் சோதனையின் போது முகமூடி மூலம்,மூக்குப்பகுதியை சரியான முறையில் மறைக்காமல் சுற்றித்திரிந்த நபர்களே அதிகமாக சிக்கினர் என்பதும் கூடுதல் தகவல். இதுபோல் மதினா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களும் இதே குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.மேலும் அந்த அறிக்கையில் இதே குற்றத்தை மீண்டும் செய்து சிக்கினால் அபராதம் இரட்டிப்பான கட்டவேண்டியது இருக்கும், மேலும் அதே நபர் மூன்றாவதாக சிக்கினால் சிறைக்கும் செல்ல வேண்டியது இருக்கும்.இதேபோல் 50-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் நிகழ்ச்சியில் கலந்துந்கொண்ட ஒவ்வோரு நபருக்குமு 5,000 ரியால்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு 40,000 ரியால்களும் அபராதம் விதிக்கப்படும்.