சவுதியில் இருந்து வெளியேறிய இந்த பிரிவு தொழிலாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு திரும்ப நாட்டில் நுழைய முடியாது;பலரது கேள்விக்கான பதிலை ஜவாசத் இன்று வெளியிட்டுள்ளது
Image:Saudi Jawazat Office
சவுதியில் இருந்து வெளியேறிய இந்த பிரிவு தொழிலாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு திரும்ப நாட்டில் நுழைய முடியாது
சவுதி அரேபியாவில் இருந்து மறுநுழைவு(Re-Entry Visa) விசாக்களில் வெளியேறிய வெளிநாட்டு தொழிலாளர்கள் விசா காலாவதி முடிவதற்கு முன்னர் நாட்டில் நுழையவில்லை என்றால் மூன்று ஆண்டுளுக்கு நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில்..... நாட்டைவிட்டு வெளியேறிய வெளிநாட்டினர்(தொழிலாளர்கள்) விசா காலாவதியாகும் முன்பு திரும்பி வரவில்லை என்றால்,அடுத்த மூன்று வருடங்களுக்கு மீண்டும் நாட்டிற்குள்(சவுதியில்) நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை பாஸ்போர்ட் பொது இயக்குநரகம்(ஜவாசத்) இன்று(31/01/21) ஞாயற்றுக்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் தற்போதைய விசா காலாவதியானாலும்,முன்பு பணிபுரிந்த அதே முதலாளியால்(Sponsore) வழங்கப்பட்ட புதிய விசாவில் நாட்டில் நுழைய பிரச்சினை இருக்காது.
பல ஆண்டுகளுக்கு முன்பு மறு நுழைவு(Re-Entry Visa) விசாக்களில் நாட்டை விட்டு வெளியேறிய வெளிநாட்டினர் மற்றும் தற்போது மீண்டும் சவுதியில் நுழைய விரும்பும் வெளிநாட்டினர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பாஸ்போர்ட் பொது இயக்குநரகம்(ஜவாசத்) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.