சவுதி அரேபியாவில் தனியார் துறை வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு வழங்குவதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது;உள்ளூர் ஊடக அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது
Image credit: The Ministry of Labor and Social Development
சவுதி அரேபியாவில் தனியார் துறை வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு வழங்குவதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது;
சவுதி அரேபியாவில் தனியார் துறையில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறையை அமல்படுத்த மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, நாட்டின் நடைமுறையில் கொண்டுவர உள்ள முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்டத்தின் திருத்தங்களில் இரண்டு நாள் விடுப்பு அடங்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு நாள் விடுமுறையை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சகம் முன்னர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது, ஆனால் தனியார் துறையின் கடுமையான எதிர்ப்பால் இந்த முடிவு இறுதி வடிவம் பெறவில்லை.
மேலும் அத்தகைய திட்டத்தை உள்ளூர்வாசிகளுக்காக(சவுதிகளுக்காக) மட்டும் செயல்படுத்த முடியாது எனவும் 70 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு இரண்டு நாள் விடுப்பு சலுகைகள் கிடைக்கும் என்றே அந்த நேரத்தில் எதிர்ப்புகள் கிளப்பியது. இதேபோல் இரண்டு நாட்கள் விடுப்பு சட்டம் நடைமுறையில் வந்து விடுப்பு அனுமதிக்கப்பட்டால், வாரத்தில் ஆறு அல்லது ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டிய தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஊதியம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தொழிற்துறை அமைச்சகம் மீண்டும் இதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.