குவைத் வெளியுறவு மந்திரி ஷேக் அகமது அல்-நாசர் அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,குவைத் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அவர்கள் தலையீடு மூலம் கத்தாரின் ஆமீர்,ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, மற்றும் சவுதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள் எனவும், அல்-உலா கையொப்பத்தின் மூலம் நீண்டகால மனக்கசப்பு நீங்க வழிவகை ஏற்பட்டுள்ளது எனவும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்.
சிறிது நேரத்திற்கு முன்னர் குவைத் வெளியுறவு மந்திரி குவைத் தொலைக்காட்சிக்கு வழங்கிய அறிக்கையில், நாட்டின் உயர்நிலை அமீரின் முன்மொழிவின் அடிப்படையில், இரண்டு நாடுகளின் வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லைகளை இன்று மாலை முதல் திறக்க ஒப்புக் கொள்ளப்பட்டது என்றார்.