சவுதி உள்துறை இன்று(03/01/21) ஞாயற்றுக்கிழமை அதிகாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் நாட்டின் எல்லைகளை இன்று திறக்கிறது எனவும்,காலை 11 மணிமுதல் விமானங்கள் சேவைகள் மீண்டும் துவங்கும் எனவும், இதுபோன்று கடல் மற்றும் நிலவழி பாதைகள் வழியாக பயணிகள் சவுதிக்குள் நுழைய முடியும். சவுதி கடந்த இரண்டு வாரங்களாக விதித்திருந்த தடையினை இதன் மூலம் நீக்கியதாக அறிவித்துள்ளது.எளிதாக கூற வேண்டும் என்றால் நாட்டின் அனைத்து எல்லைகளும் காலை 11 முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
1) சவுதி உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மரபணு மாற்றம் ஏற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நபர்களும் சவுதியில் நிபந்தனையுடன் நுழைய முடியும்(UK,சில ஆப்பிரிக்கா நாடுகள் மற்றும் சவுதி பட்டியிலிட்டுள்ள சில நாடுகள்). இவர்கள் சவுதியில் நுழைந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். சவுதியில் நுழைந்து 48 மணிநேரத்தில் முதல் கோவிட் PCR சோதனை நடத்தி Nagative என்று கண்டறிய வேண்டும்,மீண்டும் 13-வது நாள் கோவிட் PCR பரிசோதனை செய்ய வேண்டும் இதிலும் Nagative என்று கண்டறியப்பட்ட பிறகு 14-வது நாள் சவுதியில் அனுமதி(நடமாட) வழங்கபடும்.
2) மேலும் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா கண்டறியப்படாத மற்ற நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு(குடிமக்கள்,வெளிநாட்டினர்) சவுதி அரசு எப்போதும் போல் நடைமுறை படுத்தியுள்ள 7 நாட்கள் தனிமைப்படுத்தல் அல்லது 3 நாட்கள் கடந்து கோவிட் PCR பரிசோதனை செய்ய Nagative என்று கண்டறியபட்டால் அவர்கள் சவுதியின் வெளியே சாதாரணமாக நடமாட முடியும்.
3) முக்கியமாக நீங்கள் அறிய வேண்டியது சவுதி இரண்டு வாரங்களுக்கு முன்னர் விதித்திருந்த தடையை தான் நீக்கியுள்ளது. இந்திய உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகள் நேரடியாக நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டுள்ளது தொடர்பான அறிக்கை எதுவும் இதில் இடம்பெறவில்லை. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வரும் மணிநேரங்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4) சவுதியில் தற்போது வரையில் நேரடியாக நுழைய முடியாத இந்திய உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகள் தற்காலிக புகலிடமாக துபாய்,துருக்கிய உள்ளிட்ட சில நாடுகளில் தங்கியிருந்து14 நாடுகள் தனிமைப்படுத்தல் முடித்து இருந்தால் இன்று விமான நிலையம் திறப்பது முதல் அவர்கள் சவுதியில் நுழைய முடியும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது