ஓமானின் பட்டத்து இளவரசராக சையித் டெய்சீன் பின் ஹெய்தம் அல் சயீத் நியமிக்கப்பட்டுள்ளார். ஓமானின் தற்போதைய ஆட்சியாளராக உள்ள சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் மூத்த மகன் சையத் டாய்சீன் என்பது குறி்ப்பிடத்தக்கது.பட்டத்து இளவரசரின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவ்வாய்க்கிழமை(12/01/21) இரவு வெளியிடப்பட்டது.
ஓமான் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓமனின் அடுத்த வாரிசு சுல்தானின் மூத்த மகனாக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவர் தற்போது கலாச்சாரம், விளையாட்டு மற்றும் மாணவர் அமைப்பு விவகார துறையின் அமைச்சராக உள்ளார். ஓமனின் முன்னாள் சுல்தான் கபூஸின் ஆட்சிக் காலத்தில், கிரீடம் இளவரசர்கள் இல்லை. நவீன ஓமானின் வரலாற்றில் முதல் கிரீடம் இளவரசர் சையித் டெய்சீன் பின் ஹெய்தம் அல் சயீத் என்பது வரலாற்று சிறப்பு ஆகும்.