துபாயில் மீண்டும் பாதுகாப்பு சோதனைகள் கடுமையாக்கப்பட்டது;20 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன,பல வணிக நிறுவனங்களை மூடி சீல் வைத்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளன
Image credit:GETTY
துபாயில் மீண்டும் பாதுகாப்பு சோதனைகள் கடுமையாக்கப்பட்டது;20 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன
துபாயில் கோவிட் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்டறியும் நடவடிக்கைகளை அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனர். துபாய் அரசு ஏஜென்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துபாய் சுற்றுலா ஆணையம் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யாத 20 நிறுவனங்களை மூடியுள்ளது எனவும்,மேலும் சோதனையின்போது சட்டத்தை மீறுவதாக கண்டறியப்பட்ட சுமார் 200 நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு கடிதங்களை அதிகாரிகள் வழங்கினர் எனவும் தெரிவித்துள்ளது. நாட்டில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 3,000 க்கும் அதிகமாக இருப்பதால் அதிகாரிகள் மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை மட்டும் ஐந்து கடைகளை மூடி சீல் வைத்தனர். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் உள்ள நான்கு ஸ்டால்களும், ஹார் ஆல் அன்ஸில் ஒரு சலவை துணிக்கடையும் மூடியதாக தெரிவித்துள்ளது மற்றும் எட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 38 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுபோல் துபாய் வர்த்தக துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது இரண்டு வணிக நிறுவங்களை மூடி சீல் வைத்தனர், மேலும் முப்பத்திரண்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.