(தனிமையில் இருக்காதீர்கள் அதுவே முதல் தவறு)
பாடாத வளைகுடா வானம்பாடிகள்.........
அயல்நாட்டு வாழ்க்கை நம்மைப்பற்றி படரும் கொடி..... அதிலிருந்து விடுபட நினைத்தாலும் அவ்வளவு எளிதில் விடுபட இயலாது.வளைகுடா நாடுகளில் வசிக்கும் நபர்களின் தலையாய பிரச்சனையே மன அழுத்தம் தான்.இதனால் தான் பலருக்கு உடல் உபாதை அதிகமாகி இதய பிரச்சனைகளும்,தற்கொலை எண்ணமும் ஏற்பட்டு உயிரிழப்பு வரை கொண்டு செல்கின்றது.பாடாத வானம்பாடிகளாய் மனம் விட்டு பேசாமலேயே வாழ்க்கையை முடித்துகொள்கின்றனர்.
இதற்கு அடிப்படை காரணம்......
வேலைப்பளு,வேலையின்மை,அளவுக்கதிகமான வேலை,பொருளாதார சிக்கல்,வேலை எப்போது போகுமென்ற நிரந்தரம் இல்லாத நிலை போன்றவைகளாகும்.பெரும்பாலோனோர்கள் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசிப்பவர்கள்
இதை எப்படித் தவிர்க்கலாம்:
1.ஊரிலுள்ள குடும்பத்தினர் முடிந்தளவு அளவாக செலவு செய்து சேமியுங்கள். இங்கு வேலை பார்ப்பவர்களின் உண்மையான சம்பளத்தை அறிந்து திட்டமிட்டு செலவிடுங்கள்,மனம் விட்டு பேசுங்கள்,நம்பிக்கையை கொடுங்கள்.
2.இங்கிருந்து பணம் அனுப்புபவர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து மட்டும் அனுப்புங்கள்,வட்டிக்கு வாங்கி அனுப்பாதீ்ர்கள்,தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வாங்கினாலும் குடும்பத்தினரிடம் பகிருங்கள்.
3.உங்களின் உற்ற நண்பனாக பழகுபவரிடம் உங்கள் பிரச்சனைகளை கூறுங்கள்.அவர் இங்கு(வளைகுடாவில்) வசிப்பவராக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
4.உங்கள் அறையில் உங்களுடன் வசிப்பவர்களுடன் நல்ல உறவுமுறையில் இருக்க முயற்சி செய்யுங்கள்.
5.அளவுக்கதிகமாக நம்புவதும் தவறு,நம்பிக்கையே இல்லாமல் இருப்பதும் நல்லதல்ல.
6.உங்களின் வரையறைக்கு உட்பட்டு உதவுங்கள்.
7.இங்கும் Loan வாங்கி, ஊரில் Bankலும் Loan வாங்கி அல்லற்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.
8.உங்களின் அறையிலுள்ள நண்பனின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால்(தெரிந்தால்) நேரம் செலவு செய்து அவர்களோடு பேசுங்கள்.
9.பிடித்தமான பொழுதுபோக்குகளில் மனதை மாற்றலாம்.
10.தனிமையை தவிர்க்கவும்.போனில் அதிக நேரம் செலவு செய்வதை தவிருங்கள்
11.அளவுக்கு அதிகமான மன அழுத்தம் என்று உணரும்போது நல்ல சைக்காலஜிஸ்டை கண்டு கவுன்சிலிங் பெறுவது நல்லது.
பாடாத வானம்பாடியாய் இல்லாமல் இருப்பதே மனதிற்கும் உடலிற்கும் நல்லது.
எழுத்து வடிவம்(Writter)
க.நிர்மலா தமிழரசன்(செவிலியர்)