BREAKING NEWS
latest

Tuesday, January 19, 2021

அமீரகத்தில் மூடுபனி காரணமாக 19 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து, ஒருவர் பலி; 8 பேர் காயமடைந்தனர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் உட்பட 19 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததார் மேலும்,எட்டு பேர் காயமடைந்தனர்.இன்று(19/01/21) செவ்வாய்க்கிழமை காலை, அபுதாபியின் Al- Mafraq பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய வாகனங்களில் லாரிகள்,பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்டவை அடங்கும்.

கடந்த சில நாட்களாக அமீரகத்தின் பல பகுதிகளில் கடுமையான மூடுபனி நிலவி வருகின்றன. இதையடுத்து இன்று காலையிலும் கடும் மூடுபனி காரணமாக தூரப்பார்வை குறைவாக இருந்தது விபத்துக்கான காரணம் என்றும், இறந்தவர் ஆசியா நாட்டவர் என்றும் அபுதாபி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 8 டிரைவர்கள் காயமடைந்தனர் என்றும்,காவல்துறை வெளியிட்டுள்ள கூடுதல் அறிக்கையில் மூடுபனி நேரத்தில் இரண்டு வாகனங்களுக்கு இடையிலான இடைவெளி தூரத்தை கடைபிக்காததும் விபத்து ஏற்பட ஒரு முக்கியமான காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.மூடுபனி காரணமாக தூரப்பார்வை குறைந்துவிட்டதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடைய குவைத்,சவுதி உள்ளிட்ட நாடுகள் நாளை புதன்கிழமை முதல் கடுமையான குளிர் துவங்கும் என்றும் மக்கள் பாதுகாப்பான இருக்க வேண்டும் எச்சரிக்கை செய்துள்ளது. குவைத் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை துவங்கும் குளிர் சனிக்கிழமை வரையில் நீடிக்கும் என்று அறிவித்துள்ளது.

Add your comments to அமீரகத்தில் மூடுபனி காரணமாக 19 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து, ஒருவர் பலி; 8 பேர் காயமடைந்தனர்

« PREV
NEXT »