துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 6.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல், பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்;பல லட்சங்கள் மதிப்புள்ள பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 6.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல், பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்
வளைகுடாவின் எந்த நாடுகளில் இருந்தும் இல்லாத அளவுக்கு, அமீரகத்தில் இருந்து மட்டும் தினந்தோறும் சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்கு தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை கடத்தி வருவது தொடர்கதை ஆகிறது, இதிலும் சென்னை விமான நிலையத்தில் தினமும் இப்படிப்பட்ட பயணிகள் சிக்குவதும் தொடர்கதையே. இதன் தொடர்சியாக நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 6.8 கோடி மதிப்புள்ள தங்கம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது, இத்துடன் பல லட்சங்கள் மதிப்புள்ள பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக இன்று(24/01/21) மாலையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் துபாயிலிருந்து EK-542 விமானம் மூலம் வந்த 5 பயணிகளிடமிருந்து ரூ.1.75 கோடி மதிப்புள்ள 3.46 kg தங்கம் , ரூ 2.5 லட்சம் மதிப்புள்ள சிகரெட் & பழைய லேப்டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்றும்,இந்த தங்க கட்டிகளை ஆசனவாயிலிருந்து 18 தங்கப்பசை உருளைகள்,பேன்டிலிருந்து தங்க கட்டிகளாகவும் கைப்பற்றப்பட்டன என்றும், இதில் தொடர்புடைய 5 பயணிகள் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் நேற்று(23/01/21) துபாயிலிருந்து வந்த 18 பயணிகளிடமிருந்து(இதில் 4 பெண்களும் அடங்குவர்) ரூ.4.30 கோடி மதிப்புள்ள 8.45 kg தங்கம் சுங்க சட்டப்படி கைப்பற்றப்பட்டது எனவும்,ஆசனவாயிலிருந்து 51 தங்க பசை உருளைகள் வடிவில் இது கைப்பற்றப்பட்டன என்றும் ,பெண் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.