ஓமானின் ஜபல் ஷாம்ஸிலிருந்து மஸ்கட் திரும்பிக் இருந்தபோது, சமாயில் வைத்து நடந்த சாலை விபத்தில் இரண்டு இந்திய இளைஞர்கள் உயிழந்தனர் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம், சங்கனாசேரி பகுதியைச் சேர்ந்த வர்கீஸின் மகன் ஆல்வின்(வயது-22) மற்றொரு இளைஞர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தேவனுஷூ(வயது-21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அவர்கள் பயணித்த வாகனம் ஒரு டிவைடரில் மோதி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது என்று தெரியவந்துள்ளது.மேலும் இந்த விபத்தில் வாகனத்தில் உடன் பயணித்த தலசேரியைச் சேர்ந்த முகமது சுன்னூன் மற்றும் ஆலப்புழாவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.