அமீரகத்தில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை, புதிய சட்டம் அறிவித்தார் துபாய் ஆட்சியாளர்;இது தொடர்பான அறிவிப்பை அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
Image credit:UAE Official Soure
அமீரகத்தில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை, புதிய சட்டம் அறிவித்தார் துபாய் ஆட்சியாளர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளிநாட்டினருக்கான குடியுரிமைச் சட்டத்தை இன்று(30/01/21) அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புதிய குடியுரிமைச் சட்டம் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்களை இலக்காகக் கொண்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் மற்றும் நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் இதன் மூலம் குடியுரிமை கிடைக்கும்.இது தொடர்பாக சட்ட திருத்தங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபோல் நாட்டின் அமைச்சரவை, உள்ளூர் நீதிமன்றங்கள், நிர்வாக சபைகள் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் தகுதியான வெளிநாட்டினரை கண்டறிந்து குடியிருமைக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும், இப்படி குடியுரிமை பெறும் நபர்கள் தங்களுடைய சொந்த நாட்டின் தற்போதைய குடியுரிமையும் தொடர்ந்து வைத்திருக்க இந்த சட்டம் வழிவகை செய்யும் எனவும் ஆட்சியாளர் விளக்கியுள்ளனர். எனவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொடர்ந்து உள்ள வளர்ச்சி பயணத்திற்கு வழிவகுக்கும் திறமையான நபர்களை நாட்டிற்கு அதிகம் ஈர்ப்பதே புதிய சட்டத்தின் குறிக்கோள் என்று தெரிகிறது.
துபாயில் உலக வர்த்தக கண்காட்சி அக்டோபரில்,2021 தொடங்கயிருக்கும் நிலையில் வெளிநாட்டினரின் குடியுரிமை தொடர்பான புதிய சட்டத்திருத்தம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக அமீரகம் வெளிநாட்டினருக்கான 10 ஆண்டுகளாக தங்க விசாவையும்(Golden Visa) அறிமுகப்படுத்தியிருந்தது.மேலும் இன்று அறிவிக்கப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பான விரிவான கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.