அபுதாபில் சமூக ஊடகங்கள் வழியாக தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியரை அவமானப்படுத்திய வழக்கில் ஒரு இளைஞருக்கு 20,000 திர்ஹாம் இழப்பீடு வழங்க அபுதாபி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட இளைஞன் குற்றவாளி என்பதை அதிகாரிகள் கண்டறிந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அபுதாபி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் குற்றத்தில் ஈடுபட்ட நபர் பாதிக்கப்பட்ட நபருக்கு 5,000 திர்ஹாம் இழப்பீடு வழங்கவும், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியை நீக்கவும், அத்துடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசியை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. முன்னதாக பாதிக்கப்பட்ட நபர் அவதூறு செய்தி வெளியிட்டு தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 1 லட்சம் திர்ஹம் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் புகார் அளித்தவர் அணுகியிருந்தார்.
இதேபோல் கடந்த வாரம் அமீரகத்தில் பணியிடத்தில் தன்னுடைய சக ஊழியர் ஒருவர் அவமானப்படுத்தியதாக இளைஞர் ஒரு தொடுத்த வழக்கிலும் இதேபோல் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.