அமீரகம்-இந்தியா இடையே பயணிக்க 300 திர்ஹம் மட்டுமே கட்டணம்,ஏர் அரேபியா நிறுவனம அதிரடி அறிவித்துள்ளது இது தொடர்பான செய்திகள் அங்கிருந்த வருகின்ற செய்தி தளங்கள் வெளியிட்டுள்ளது
Image credit: AirArabia Official
அமீரகம்-இந்தியா இடையே பயணிக்க 300 திர்ஹம் மட்டுமே கட்டணம்,ஏர் அரேபியா நிறுவனம அதிரடி அறிவிப்பு
அமீரகத்தின் ஷார்ஜாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர்-அரேபியா விமானம் நிறுவனம் அமீரகம்-இந்தியா இடையே ஒருவழியாக பயணிக்க 300 திர்ஹம் மட்டுமே விமான பயணச்சீட்டு கட்டணமாக அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து படிப்படியாக மீண்டும் வருகின்ற அமீரகத்தின் தொழிற்துறை,வணிகம் மற்றும் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கான உதவும் வகையில் இந்ததள்ளுபடி கட்டணங்களை விமான நிறுவனம் அறிவித்துள்ளது என்று தெரிகிறது.
மேலும் ஷார்ஜாவிலிருந்து தனது விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இலவச உலகளாவிய கோவிட்-19 மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை விமான நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த காப்பீடு அட்டை நீங்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் தானாகவே, முன்பதிவுடன் சேர்க்கப்படும் மற்றும் பயணிகளிடமிருந்து கூடுதல் ஆவணங்கள் எதுவும் இதற்காக தேவையில்லை. பயணிகள் தங்கள் விமான பயணத்திட்டத்தில் புறப்பட்ட நாளிலிருந்து 31 நாட்களுக்கு இந்ந காப்பீடு அட்டை செல்லுபடியாகும், இதில் மருத்துவ செலவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட செலவுகள் ஆகியவை அடங்கும். இந்த சிறப்பு சலுகை திட்டத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் ,ஏர் அரேபியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும் அல்லது நிறுவனத்தின் 06-5580000 என்ற எண்ணிலும் அழைத்து தகவல்களை பெறலாம்.
Low Fare | AirArabia Flight | India UAE