அபுதாபி பணியில் இருக்கும் ஒரு சக ஊழியரை அவமதித்து அச்சுறுத்தியதற்காக ஒரு இளைஞனுக்கு 10,000 திர்ஹாம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரபு நாட்டவர் குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது.விசாரணையில் அவர் பணியிடத்தில் மற்றவர்களுக்கு முன்னால் அவமதித்து,துன்புறுத்துவதாக கூறப்படுகின்றது ஆனால் வழக்கு ஆவணங்களில் இருவருக்கும் இடையிலான சர்ச்சைக்கான காரணம் தெளிவாக இல்லை. அவர் அனுபவித்த மன வேதனைக்கும் அவமானத்திற்கும் 60,000 திர்ஹாம் இழப்பீடு கோரி சிவில் வழக்கு ஒன்றை பாதிக்கப்பட்ட நபர் தாக்கல் செய்தார்.
அவர் தொடுத்த வழங்கில்,உடன் வேலை செய்யும் ஊழியர்கள் முன்னால் நடந்த அவமானம் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பிரதிவாதியின் வழக்கறிஞர் வாதித்தனர். ஆனால் நீதிமன்றம் அவரை குற்றவாளியாகக் கண்டறிந்து 10,000 திர்ஹாம் இழப்பீடுகளை வழங்க உத்தரவிட்டது என்ற செய்தி வெளியிட்டுள்ளது.