BREAKING NEWS
latest

Saturday, January 16, 2021

அமீரகத்தில் 100 கோடி திர்ஹாம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்;வெளிநாட்டவர்கள் உட்பட 22 பேர் கைது


(Photo:Abudhabi Police Official Source)

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 100 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான போதைப் பொருள் குவியல்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.மேலும் இது தொடர்பான வெளிநாட்டினர் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டன என்று அபுதாபி காவ‌ல்துறை செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான அபுதாபி காவ‌ல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், 100 கோடி திர்ஹாம் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 பேர் அபுதாபியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.041 டன் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,இந்த சொதனையின் போது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் உறுப்பினர்கள் பலரையும் கைது செய்ததாகவும் போலீசார் வெள்ளிக்கிழமை(நேற்று) தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சட்டத்திற்கு புறம்பாக பணத்தை பல்வேறு வழிகளில் நாட்டைவிட்டு வெளியேற்றும் பணிகளை செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.காவல்துறைக்கு கிடைத்த பல்வேறுபட்ட இரகசிய தகவல்கள் அடிபடையில், கிடைத்த தகவல்களின் உண்மை தன்மையினை முழுமையான விசாரணை செய்த பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனைகளில் இந்த மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அபுதாபி போலீசார் தெரிவித்தனர்.

அபுதாபி காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு இயக்குநரகத்தின் தலைவர் கர்னல் தாஹிர் கரிப் அல்-தாஹிரி கூறுகையில், அமீரகத்திற்கு வெளியே உள்ள பல்வேறு போதைப்பொருள் கடத்தல் குழுக்களும்,இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது எனவும்,அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


<a href="/search?q=Seizure+Drugs">Seizure Drugs</a> | 

<a href="/search?q=100Crore+Dirhams">100Crore Dirhams</a> | 

<a href="/search?q=Abudhabi+Police+">Abudhabi Police </a> 

Add your comments to அமீரகத்தில் 100 கோடி திர்ஹாம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்;வெளிநாட்டவர்கள் உட்பட 22 பேர் கைது

« PREV
NEXT »