16 வயது சிறுமி மூக்கில் ஏதோ அடைப்பு இருப்பதுபோல் உணர்கிறேன் என்று பஹ்ரைனில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் சோதனையில் அதிர்ச்சி காத்திருந்தது,சிறுமி மூக்கில் முழுமையாக வளர்ச்சியடைந்த பல் இருப்பது கண்டறிப்பட்டது. இதையடுத்து ENT ஆலோசகர் மற்றும் பேராசிரியர் ஹெஷாம் யூசெப் ஹாசனின் வழிகாட்டுதலின் பேரில் கிங் ஹமாத் பல்கலைக்கழக வைத்து மருத்துவமனையில் பல் அகற்றப்பட்டது. ஆப்டிகல் ஃபைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் மூக்கில் இருந்து பல் அகற்றப்பட்டது.
முன்னர் மருத்துவமனையில் ஈ.என்.டி பிரிவுக்கு வந்த சிறுமி, மூக்குக்குள் அடைப்பு ஏற்பட்டு மூச்சுவிட முடியவில்லை எனவும், ஏதோ இருப்பதாக உணர்ந்ததாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து எண்டோஸ்கோபி மற்றும் சி.டி ஸ்கேன் பரிசோதனையில் மூக்குக்குள் பல் போன்ற ஒன்று இருப்பது தெரியவந்தது. இது நாசிக்கு நடுவில் அமைந்திருந்தது. பேராசிரியர் ஹசன் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் பல் அகற்றப்பட்டு நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என்றார்.சூப்பர்நூமரி பல் என்று அழைக்கப்படும் இந்த வகை பல் உலகில் 100 முதல் 1000 பேரில் ஒருவருக்கு மட்டுமே காணப்படுகிறது என்றும், மூக்கில் பல் வளர்வது அரிது என்றும் அவர் கூறினார்.