(Kuwait heath Minister) |
குவைத்திலிருந்து கொரோனா தடுப்பூசி எடுக்கொண்ட ஒருவர் மீண்டும் குவைத்தில் நுழையும் போது, மற்ற பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் சான்றிதழ் சமர்பித்தல் மற்றும் இரண்டு வார தனிமைப்படுத்தலில் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இது ஜூன் முதல் மட்டுமே சாத்தியமாகும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஆனால் கோவிட் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து பெற்று நாட்டிற்குள்(குவைத்திற்குள்) வருபவர்களுக்கு இப்போதைக்கு இந்த நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படாது. தற்போது, குவைத் உட்பட பல நாடுகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்துகளை எடுத்துக்கொண்ட நபர்களுக்கு தடுப்பூசி எடுத்ததற்காக சான்றிதழ்களை வழங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசிய எடுக்கொண்ட சான்றிதழ் பெற்றிருந்தாலும், அதை பயன்படுத்திய மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு,பிற நாடுகளிலிருந்து தடுப்பூசி சான்றிதழ்களுடன் நாட்டிற்குள் வருபவர்களுக்கு பி.சி.ஆர் சான்றிதழ் சமர்பித்தல் மற்றும் இரண்டு வார தனிமைப்படுத்தலில் ஆகியவற்றில் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி எடுக்கொண்ட சான்றிதழ்கள் மோசடி செய்யப்படுவதைத் தடுக்க உலகளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.மேலும் தடுப்பூசிக்கு அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஒப்புதல் அளிக்க உலகளாவிய மின்னணு சான்றிதழ் வழங்கும் அமைப்பு தேவை. இதுபோல் சான்றிதழின் உண்மை தன்மையினை சரிபார்க்க அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் விதத்தில் பொதுவான மின்னணு தளம் ஒன்றும் தேவையாக உள்ளது. இவை அனைத்தும் நடைமுறையில் வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குவைத் அரசு சார்பில் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடித்து, கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட டோஸ் தடுப்பூசி மருந்து எடுத்துக்கொண்ட நபர்களுக்கு நேற்று முதல் மின்னணு சான்றிதழ்களை வழங்கும் பயணிகள் தொடங்கியுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் அறிவித்தார்.