வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின்,சவுதி அரேபியா பிரிவு சார்பில் மாபெரும் இரத்ததான நிகழ்ச்சி;இந்தியாவின் 72 ஆம் ஆண்டின் குடியரசு தினத்தையும் மற்றும் தமிழர்திருநாளாம் தைபொங்கலை கொண்டாடும் விதத்திலும்
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின்,சவுதி அரேபியா பிரிவு சார்பில் இரத்ததான நிகழ்ச்சி நடைபெற்றது
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் ரியாத் மண்டலம் சார்பில், இந்தியாவின் 72-ஆம் ஆண்டின் குடியரசு தினத்தையும் மற்றும் தமிழர்திருநாளாம் தைபொங்கலை கொண்டாடும் விதத்திலும் இன்று(22/01/2021) வெள்ளிக்கிழமை மாபெரும் இரத்ததான நிகழ்ச்சி வெகு சிறப்பாக சுமேஷி(Sumeshi) மருத்துவமனையில் வைத்து நடந்தது எனவும், இந்த சிறப்புமிகு நிகழ்ச்சி ரியாத் மண்டல மருத்துவ சேவை அணி செயலாளர் லெனின் அவர்கள் தலைமையில் நடந்தது என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஆரிப்,இணை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் ,ரியாத் மண்டல செயலாளர் ராபர்ட் ராஜா அவர்களின் முன்னிலையில் சங்க பொறுப்பாளர் கனியின் வரவேற்புரையுடன் இந்த புனிதமான நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ரியாத் மண்டல தலைவர் செய்யத் மரைக்காயர் சங்க செயல்பாடுகள் பற்றி எடுத்து கூறி சிறப்புரையாற்றினார். கொரோனா பிரச்சனை மிகவும் நெருக்கடி மிகுந்த காலம் இருந்தாலும் முப்பது உறவுகள் வரையில் இரத்த தானம் செய்துள்ளனர்.
இந்த இரத்ததான நிகழ்வுக்கு பொருளாதார உதவிகள் சில நஜ்ரான் மண்டல தலைவர் அப்துர் ரஹிம் உதவினார் என்பதும் நோட்டீஸ் சான்றிதழ் ஆகியவை குவைத் மண்டல ஒருங்கிணைப்பாளர் நவ்சாத் அலி அவர்களும் அவரது மகனார் ஜுனைத் ஆகியோரும் உதவினர் எனவும், ஊடக செயலர் காளிதாஸ் நன்றியுரையுடன் இரத்த தான நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக விரைவில் சுதந்திர தினத்தில் மீண்டும் இரத்த தான முகாம் நடத்துவது எனவும் பேசப் பட்டது,மேலும் இரத்த தான முகாமிற்கு தான் மட்டும் அல்லாது தன்னுடைய நண்பர்களையும் அழைத்து வந்து சிறப்பித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும், பல்வேறு விதத்தில் இரத்த தான முகாமிற்காக எங்களுக்கு உருதுணையாக இருந்து ஊக்கம் அளித்த ஜித்தா மண்டல நிர்வாகிகள் மற்றும் ஜெனுல் ஆப்தீன்,ஜக்கரியா அண்ணன், ,ஜாகிர் அண்ணன்,ஹமீது பாய், அக்ரம் பாய் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.