குவைத்தில் இனிமுதல் புதிய தொழில் விசாகள் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்;விண்ணப்பிப்பதற்கான அடிப்படை நிபந்தனையே அமைச்சரவையின் ஒப்புதல் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
குவைத்தில் இனிமுதல் புதிய தொழில் விசாகள் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்
குவைத்தில் இனிமுதல் புதிய பணி விசா பெற அமைச்சரவையின் ஒப்புதல் தேவைப்படும் என்ற தகவலை மனிதவள மேம்பாட்டுக்கான துறையின் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதன்படி, நாட்டில் வேலை செய்ய விரும்பும் தொழிலாளர்களை அழைத்து வர அமைச்சரவையின் அனுமதி தேவைப்படும். மனிதவள மேம்பாட்டுக் குழு அமைச்சகம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு புதிதாக அறிமுகம் செய்த மின்னணுபடிவங்கள் மூலம் பணி அனுமதி பத்திரங்கள்( Work Permit) பெற விண்ணப்பிப்பதற்கான அடிப்படை நிபந்தனையே அமைச்சரவையின் ஒப்புதல் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான அனுமதி அமைச்சகம் சம்பந்தப்பட்ட துறையுடன் ஒருங்கிணைந்து வழங்கப்படும். புதிய முடிவு விசா வர்த்தகத்தைத் தடுக்கும் நோக்கில் உள்ளது என்பதற்கான அறிகுறியாக தெரிகிறது. இந்த முடிவை அமல்படுத்துவதன் மூலம், குவைத்துக்கு புதிய பணி விசா பெறுவது மிகவும் கடினம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போலியான இடைத்தரகர்களை ஒழிக்க இந்த புதிய மாற்றம் சிறந்த வழிகாட்டியாவும் இருக்கும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.