குவைத்தில் இந்திய இளைஞர்(வயது-34) ஒருவர் மாரடைப்பால் உயிழந்தார்;இன்று வியாழக்கிழமை காலையில் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது
குவைத்தில் இந்திய இளைஞர்(வயது-34) ஒருவர் மாரடைப்பால் உயிழந்தார்
குவைத்தில் இந்தியரான ஆண் செவிலியர் ஒருவர் இளம் வயதில் மாரடைப்பால் இன்று(28/01/2021) வியாழக்கிழமை உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவர் இந்தியா,கேரளா மாநிலம், கோட்டயம், திரிக்கோடிதானம், கொடிநாட்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஜோபின் ஆண்டனி(வயது-34) என்பது தெரியவந்துள்ளது. இன்று காலையில் வேலை வராத காரணத்தால் நண்பர்கள் தேடிச் சென்ற நேரத்தில் அறையில் தன்னுடைய படுக்கையில் ஆண்டனி இறந்து கிடந்தார் எனவும், மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என்பதும் தெரியவந்துள்ளது.
ஆண்டனி கடந்த மூன்று ஆண்டுகளாக, குவைத்தில் உள்ள அல்கானிம் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனத்தின் அல்- சுர் பகுதிதில் உள்ள முகாமில் செவிலியராக பணியாற்றிய வந்தார். இவருக்கு ஜில்மி என்ற மனைவி, ஒரு வயதான மகள் உள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றிய ஃபர்வானியா,தாஜீஜில் உள்ள பிணவறைக்கு உடலை மாற்றினர். வளைகுடா நாடுகளில் இளம் வயதில் வெளிநாட்டினர் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் நிகழ்வு மிகவும் வேதனையாக உள்ளது.