துபாயில் இருந்து குவைத்திற்கு ஒரு பயணச்சீட்டு விலை 1400 தினார்கள் உலக சாதனை படைத்துள்ளது14,000 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன எனவும், இதன் மூலம் 1,400,000 தினார்கள் வரையில் இழப்பு
துபாயில் இருந்து குவைத்திற்கு ஒரு பயணச்சீட்டு விலை 1400 தினார்கள் உலக சாதனை படைத்துள்ளது
துபாயில் இருந்து குவைத் வருகின்ற விமானத்தின் பயணச்சீட்டு விலை 1400 தினார்களை எட்டியுள்ளது என்று Travel மற்றும் Tourism கூட்டமைப்பின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் முஹம்மது அல்-முத்தேரி அவர்கள் தினசரி நாளிதழ் ஒன்று இன்று(04/02/21) அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். குவைத் குடிமக்கள் அல்லாதவர்கள் விமானம் மற்றும் துறைமுகம் வழியாக நாட்டில் நுழைய தற்காலிக தடை விதித்து அரசு முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ள நிலையில் ,இந்த அறிவிப்பு பயணிகளை பெரும் குழப்பமடை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக துபாயிலிருந்து குவைத்துக்கு அடுத்த வருகின்ற விமானத்திற்கு 1400 தினார் தொகையை ஒரு பயணச்சீட்டு கட்டணமாக வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் பல வெளிநாட்டினர் தடை அமலுக்கு வருவதற்கு முன்பு நாட்டிற்கு திரும்பி வர விரும்புகிறார்கள் என்பதை இதற்கு காரணமான கூறப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை முதல் விமான முன்பதிவு முறைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால்,அடுத்த வாரம் நாட்டில் நுழைய வேண்டிய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர் விமானங்களை கண்டறிய முடியாமல் பயணச்சீட்டுகளு ரத்து செய்துள்ளனர். அமைச்சரவை முடிவை அமல்படுத்திய பின்னர், 14,000 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன எனவும், இதன் மூலம் 1,400,000 தினார்கள் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
பயணச்சீட்டு விலை உயர்வுக்கு ஒரு விமானத்தில் 35 பயணிகள் மற்றும் ஒருநாளைக்கு 1000 பயணிகள் மட்டுமே நாட்டில் நுழைய முடியும் உள்ளிட்ட கடுமையான கட்டுபாடுகள் நடைமுறையில் உள்ளதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. பிப்ரவரி-7 ஞாயிற்று முதல் இரண்டு வாரங்களுக்கு வெளிநாட்டில் நுழைய தடை முதல்கட்டமாக நடைமுறையில் வருகின்றன. இதுபோல் நேரடியாக குவைத்தில் நுழைய தடையுள்ள இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நபர்கள் துபாயினை தற்காலிக புகலிடமாக கொண்டு குவைத்தில் நுழைய காத்திருந்த நிலை இந்த புதிய அறிவிப்பு அவர்களுக்கு பேரிடியாக உள்ளது. இந்த தற்காலிக தடையிலிருந்து குடிமக்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்களுக்கு(Article-20) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.