குவைத் விமான நிலையம் திறக்கப்பட்டு 48 மணிநேரத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 1,442 பேர் நாட்டிற்க்கு வந்துள்ளனர் என்ற தகவல் தற்போது வழங்கியுள்ளது
Image : Kuwait Airport
குவைத் விமான நிலையம் திறக்கப்பட்டு 48 மணிநேரத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 1,442 பேர் நாட்டிற்க்கு வந்துள்ளனர்
குவைத் விமான நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம்(பிப்ரவரி- 21) ஞாயிற்றுக்கிழமை முதல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து 48 மணி நேரத்தில் 48 விமானங்களில் 1,442 பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இதில் 989 குடிமக்கள் மற்றும் 453 வீட்டுத் தொழிலாளர்கள் ஆவார்கள். இதில் 382 குடிமக்கள் மற்றும் 331 வீட்டுப்பணியாளர்கள் உட்பட 25 விமானங்களில் மொத்தம் 713 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவைத் வந்தடைந்தனர். இதுபோல் நேற்று திங்கள்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி, 22 விமானங்களில் 607 குடிமக்கள் மற்றும் 122 வீட்டுத் தொழிலாளர்கள் உட்பட 729 பயணிகள் குவைத் வந்தடைந்தனர்.
பயணிகளில் பெரும்பாலோர் வளைகுடா நாடுகள், துருக்கி மற்றும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். வந்த அனைத்து பயணிகள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நாடு முழுவதும் உள்ள பல ஹோட்டல்களில் நிறுவன தனிமைப்படுத்தலில் உள்ளனர். குடிமக்கள் "குவைத் மொசாஃபர்" தளத்திலும் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு "பெல்சலாமா" தளத்திலும் பதிவு செய்த பின்னர் நாட்டிற்கு வந்தனர். சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இவர்களுக்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டன எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.