குவைத்தில் 5 இந்திய இன்ஜினியர்கள் போலியான சான்றிதழ் தொடர்பான சிக்கியுள்ளனர்;சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டில் தெரிவித்துள்ளார்
குவைத்தில் 5 இந்திய இன்ஜினியர்கள் போலியான சான்றிதழ் தொடர்பான சிக்கியுள்ளனர்
குவைத் சொசைட்டி ஆஃப் இன்ஜினியர்ஸ் அமைச்சகத்தின் தலைமை அதிகாரி பைசல் அல் அடல் போலி பொறியாளர்கள் சான்றிதழ்கள் தொடர்பான மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.இதிலு ஐந்து இந்திய நாட்டவர்கள் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இவர்கள் கையொப்பம் தொடர்பான மோசடி மற்றும் அரசு சார்ந்த முத்திரை தவறான பயன்படுத்தியது, பொறியாளர்கள் பணிபுரிந்த நிறுவனங்களுக்கிடையிலான ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல் ஆவணங்கள் ஆகியவை மோசடி நடவடிக்கைகளை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் மற்ற இருவர் சம்பந்தப்பட்ட துறையின் வழக்கு விசாரணைக்காக பரிந்துரை செய்து அனுப்பப்பட்டனர் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.