BREAKING NEWS
latest

Wednesday, February 3, 2021

குவைத்தில் போலி பி.சி.ஆர் சான்றிதழுடன் நுழைந்தால் 500 தினார் அபராதம்;திருப்பி அனுப்பப்படுவார்கள்

குவைத்தில் போலி பி.சி.ஆர் சான்றிதழுடன் நுழைந்தால் 500 தினார் அபராதம்;திருப்பி அனுப்பப்படுவார்கள்;போலியான பி.சி.ஆர் சான்றிதழ்களுடன் நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்

குவைத்தில் போலி பி.சி.ஆர் சான்றிதழுடன் நுழைந்தால் 500 தினார் அபராதம்;திருப்பி அனுப்பப்படுவார்கள்

குவைத் நாட்டிற்குள் போலி பி.சி.ஆர் சான்றிதழுடன் நுழையும் வெளிநாட்டு பயணிகள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவார்கள். அதே நேரத்தில் கூடுதலாக பயணியை அழைத்து வந்த , விமான நிறுவனத்திற்கு நபர் ஒன்றுக்கு 500 அபராதம் விதிக்கப்படும். போலியான பி.சி.ஆர் சான்றிதழ்களுடன் நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான செய்தியை குவைத் தினசரி செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேலும் பயணிகள் குவைத் குடிமக்களான இருந்தால், அவர்களை விரிவான நிலைய மருத்துவ பரிசோதனை பிரிவுக்கு மாற்றப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படும், அதேநேரம் விமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி வெளிநாடுகளில் இருந்து குவைத் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 72 மணிநேரத்திற்குள் செல்லுபடியாகும் பி.சி.ஆர் பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.

குவைத் விமான நிலையத்தில் கொரோனா எதிர்மறை சான்றிதழுடன் வரும் பயணிகளில், விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் கோவிட் நோய்த்தொற்று இருப்பது கண்டறியும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் குவைத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் 'முனா' தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் வருகிறது, குவைத் சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள நோய்தொற்று பரிசோதனை ஆய்வகங்கள் முனா அமைப்பு கணினி நெட்வொர்க் வழியாக இணைக்கப்படும். இதன் மூலம் பி.சி.ஆர் பரிசோதனை எதிர்மறை சான்றிதழின் நம்பகத்தன்மை நொடிப்பொழிதில் அறிய முடியும். இதற்கிடைய போலி பி.சி.ஆர் சான்றிதழுடன் வருபவர்களைத் தடுக்க புதிய நடவடிக்கைகளுடன் அதிகாரிகள் முன்னேறி வருகின்றனர்.

Add your comments to குவைத்தில் போலி பி.சி.ஆர் சான்றிதழுடன் நுழைந்தால் 500 தினார் அபராதம்;திருப்பி அனுப்பப்படுவார்கள்

« PREV
NEXT »