பாலைவனத்தில் பட்டினி கிடந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்;இந்த சம்பவம் தொடர்பாக தகவலை முதலில் உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது
பாலைவனத்தில் பட்டினி கிடந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்
பாலைவனத்தில் சிக்கிய, குடும்பம் பட்டினி கிடந்தது உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது.இந்த துயரமான சம்பவம் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் நடந்துள்ளது.சூடான் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இதில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலை முதலில் உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. மேலும் அவர்களின் மரணம் குறித்த சில படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. புகைப்படங்களில் காரைச் சுற்றி சடலங்கள் கிடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பல உடல்கள் பாதி சிதைந்த நிலையில் காணப்பட்டன.மேலும் சில உடல்கள மணல் திட்டுகளால் ஓரளவு மூடபட்டு உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
அந்நாட்டின் உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, குழந்தைகள் உட்பட சுமார் 21 பேர் இந்த பயணத்தில் ஈடுபட்டனர்.லிபியாவின் தலைநகரமான குஃப்ராவிலிருந்து தென்மேற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளை டொயோட்டா சீக்வோயா கார் கண்டுபிடிக்கப்பட்டது.காரின் அருகில் உடல்களில் சில கிடந்தன,அதில் மூன்று பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களின் உடல்கள் இருந்தன இருப்பினும், உடன் பயணம் செய்த மற்ற 13 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் சூடானின் எல் பேஸரில் இருந்து லிபியாவின் குஃப்ராவுக்கு இந்த குடும்பம் பயணம் மேற்கொண்டதாக லிபியா போலீசார் தெரிவித்தனர். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது எனவும்,அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது எனவும், இந்த கடிதத்தை யார் கண்டுபிடித்தாலும் இது எனது சகோதரரின் தொலைபேசி எண் எனவும், நான் உங்களை கடவுளிடம் ஒப்படைக்கிறேன்.என் அம்மாவை உங்களிடம் அழைத்து வந்ததற்கு மன்னிக்கவும் என்று ஏழுதப்பட்டு இருந்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.