சவுதி அரேபியாவில் இப்போது அப்சீர் சேவைகைள் விசிட் விசா மற்றும் குடும்ப விசாவில் உள்ளவர்களும் கிடைக்கும்;பாஸ்போர்ட் இயக்குநரகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
Image credit: Official Soure
சவுதி அரேபியாவில் இப்போது அப்சீர் சேவைகைள் விசிட் விசா மற்றும் குடும்ப விசாவில் உள்ளவர்களும் கிடைக்கும்
சவுதி அரேபியாவுக்கு விசிட் விசாவில் வருபவர்கள் மற்றும் குடும்ப விசாவில் உள்ளவர்களும் இனிமுதல் ஜவாசத்தின்(பாஸ்போர்ட் இயக்குநரகம்) ஆன்லைன் போர்டல் 'அப்சீர்' சேவைகளைப் பெற முடியும். அப்சீர் என்பது பல்வேறு அரசு சேவைகளுக்கான ஆன்லைன் தளமாகும். இதன் மூலம், தற்போதைய கோவிட் சூழலில் பல்வேறு ஆன்லைன் சேவைகளை விசிட் விசாக்களில் உள்ளவர்களுக்கு விரைவாக கிடைக்கும். சுருக்கமாக சொன்னால் சவுதி அரேபியாவில் நுழையும் எவருக்கும் இப்போது அப்சீர் சேவை கிடைக்கும் என்று சவுதி பாஸ்போர்ட் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தற்போது, சவுதி நாட்டவர்கள்(குடிமக்கள்) மற்றும் இகாமா(Work Permit) கைவசம் உள்ள வெளிநாட்டவர்கள் மட்டுமே அப்சீரில் ஒரு கணக்கைத் திறக்க முடியும் என்ற நிலையில் இந்த புதிய அறிவிப்பு மூலம் மாற்றம் வந்துள்ளது. குடும்ப விசா கொண்ட நபரின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இப்போது கணக்கைத் திறக்க முடியும். அனைத்து வகையான விசிட் விசாக்களை வைத்திருப்பவர்களும் இப்போது அப்சீரில் பதிவு செய்யலாம். இதற்காக நீங்கள் தானியங்கி இயந்திரம் அல்லது பல்வேறு மால்களில் இயக்கத்தில் உள்ள ஜவாசத் அலுவலகங்களைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது, விமான நிலையம் வழியாக சவுதியில் நுழையும் போது பெறப்பட்ட Border Number -ஐ இகாமா எண்ணுக்கு பதிலாக சேர்க்க வேண்டும். அதனுடன் உங்கள் தொலைபேசி எண்ணையும் சேர்த்து பதிவு சேவையினை முடிக்க வேண்டும் . இதன் மூலம் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.மேலும், விசிட் விசாவின் அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் ஆவணமாக உங்கள் தொலைபேசியில் இதன் மூலம் கிடைக்கும்.