குவைத் மற்றும் சவுதியில் நுழைய காத்திருக்கும் இந்தியர்களுக்கு அபுதாபி இந்திய தூதரகம் சற்றுமுன் முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது;அதன் விபரங்கள் பின்வருமாறு
Image : Abudhabi Indian Embassy
குவைத் மற்றும் சவுதியில் நுழைய காத்திருக்கும் இந்தியர்களுக்கு அபுதாபி இந்திய தூதரகம் சற்றுமுன் முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது
அபுதாபி இந்திய தூதரகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில். சவுதி,குவைத் நாடுகள் இந்தியா, அமீரகம் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டில் நுழைய திடிரென தற்காலிக தடை விதித்துள்ளது. அதிலும் இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு நேரடியாக நுழைய கடந்த பல மாதங்களாக தடை நிலுவையிலுள்ள நிலையில் அமீரகத்தை தற்காலிக புகலிடமாக கொண்டு சவுதி மற்றும் குவைத்தில் நுழைந்து வந்தனர். இந்நிலையில் அமீரகத்தில் உள்ளவர்களுக்கும் திடிரென தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக அமீரகத்தில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் எனவும்.
இப்படி சிக்கியுள்ள இந்தியர்களில் பலருக்கும் விசிட் விசா காலாவதி உள்ள நிலையில் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் சவுதி,குவைத் விதித்துள்ள இந்த தற்காலிகமாக தடை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக நீங்குமா அல்லது நீட்டிப்பு செய்யப்படுமா....??? என்பது குறித்து இப்போதும் தெளிவாக தகவல் எதுவும் இல்லை எனவும். எனவே இப்படிப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பும் முடிவை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும். இந்த சூழ்நிலையிலும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் டிராவல் ஏஜென்சிகள் வாக்குறுதியை நம்பி அமீரகத்தில் புதிதாக வந்தவண்ணம் உள்ளனர் எனவும், இவர்கள் அமீரகத்திற்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் எனவும், இதுபோல் தற்போதைய சூழ்நிலையில் கூடுதல் நாடுகள் தங்கள் நாடுகளில் வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கக்கூடும் எனவே இப்படி தற்காலிக புகலிடமாக கொண்டு சவுதி,குவைத் நுழைய வருகின்ற நபர்கள் கூடுதலான கையிருப்பு பணத்தை கைவசம் வைத்துக் கொண்டு மட்டுமே தாயகத்தில் இருந்து புறப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.